கேள்வி - சராசரி மனித வயது 120 என்றுதான் ஜோதிட சாஸ்திரமே கூறுகிறது. ஆனால் சித்தர்கள் 1000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது?
பதில்- சராசரி மனிதனையும், சித்தர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது ஏற்புடையதல்ல. ஒரு கலைக் கூத்தாடி கயிற்றின் மீது ஏறி நிற்கிறான், நடக்கிறான், கரணமடிக்கிறான் என்னென்னவோ செய்கிறான். நம்மால் அதில் ஏற கூட முடியாது. அதற்காக அந்த வித்தை பொய் என்றோ, கண்கட்டு வித்தை என்றோ சொல்ல முடியுமா ? சித்தர்கள் நீங்களும் அத்தகைய வாழ்வை, சாகாப் பெருநிலையை அடைய முடியும் என்றுதானே சொல்கிறார்கள் ? அதற்கான வழி முறைகளையும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றை எதையுமே கடைபிடிக்காமல் அதைப் பற்றி ஐயம் கொள்வது தவறு என்றுதான் நான் நினைக்கிறேன்.
விஞ்ஞானி ஐன்ஸ்டின் என்ன சொல்கிறார் தெரியுமா ? இந்த உலகையே இரண்டு விஷயங்களுக்குள் அடக்கி விடலாம் என்று சொன்னார். அது என்ன இரண்டு விஷயம் ? ஒன்று காலம், மற்றொன்று இடம்.
அதாவது விளக்கமாகச் சொல்கிறேன். அனைத்து சமயங்களும் இறைவன் ஒளிமயமானவர் என்றுதான் சொல்கின்றன. இந்த ஒளியின் வேகம் என்ன தெரியுமா ? ஒரு விநாடிக்கு ஒரு இலட்சத்தி எண்பத்தி
ஆறாயிரம் மைல். அதாவது ஆன்மீக ரீதியில் சொன்னால் இறையாற்றலின் வேகம் ஒரு விநாடிக்கு ஒரு இலட்சத்தி எண்பத்தி ஆறாயிரம் மைல் வேகம். இதை விட வேகமாக எதுவும் இயங்க முடியாது.
இயங்கினால் என்னவாகும் ?
அதுவும் ஒளியின் வேகத்தில் அதாவது ஒளியில் வந்து அடங்கி விடும். இதை நான் சொல்வில்லை விஞ்ஞானி ஐன்ஸ்டின் சொல்லியிருக்கிறார். இதற்கு அவர் ஒரு கணக்கும் சொல்கிறார். அதாவது ஒரு முப்பது வயது மனிதனை ராக்கெட்டில் ஏற்றி மூன்று மாதங்கள் ஒளியின் வேகத்தில் வானத்தில் செலுத்தினோம் என்றால், அவன் திரும்பி வரும் பொழுது, அவன் பேரனுக்கு தொண்ணாறு வயது ஆகியிருக்குமாம். ராக்கெட்டில் சென்றவனுக்கு முப்பது வயதும் மூன்று மாதமும்தான் வயது. ஆனால், அவன் திரும்பி வரும் பொழுது பூமியில் நூற்றியிருபது ஆண்டுகள் கடந்திருக்குமாம்.
விமானத்தில் சென்னையிலிருந்து மலேசியா செல்வதற்கு மூன்று மணி நேரம் ஆகிறது. இங்கிருந்து பன்னிரண்டு மணிக்குக் கிளம்பினால் மூன்று மணிக்கு விமானம் தரையிரங்கி விடும். ஆனால், அங்கே போனவுடன் கடிகாரத்தை ஐந்தரை மணிக்கு மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் காலம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அது போலவே காலமது சித்தர்களுக்கு ஒன்றாகவும், நம்மிடத்தில் ஒன்றாகவும் செயல்படுகின்றது. ஏனெனில் திருமூலர் மிகப் பெரிய தவசி. அவர் அந்த அருட்பெருஞ் சோதியாகிய அருள் வெளியில் ஒன்றிக் கலந்தவர். ஒளியின் வேகத்தில் கலந்த அவர் ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டிருப்பார்.
அவருக்கு அது மூவாயிரம் நொடிகளாகக் கூட இருக்கலாம். ஆனால் பூமியில் அதற்குள் மூவாயிரம் ஆண்டுகள் கடந்து போயிருக்கும். இதை வேத புராணாதிகள் தேவ ஆண்டு, மனித ஆண்டு என்று வகைப்படுத்திக் கூறுவார்கள். தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நமக்கு ஒரு ஆண்டு என்பார்கள். தேவ ஆண்டில் மார்கழி மாதம்தான் வைகறைப் பொழுது என்பார்கள். எனவே திருமூலர் மூவாயிரம் மட்டுமல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்திருந்தது சாத்தியமே என்பதற்கு விஞ்ஞான ரீதியிலான ஆதாரமே இருக்கிறது.
அவரே திருமந்திரத்தில் '' இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி'' என்று சொல்லியிருப்பதை கவனத்தில் கொள்க. நாமும் அத்தகைய நிலையை அடையலாம் என்று அவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள். ஆனால், அதற்கு நாம் அவர்கள் காட்டிய வழியில் நடக்க வேண்டும்.
🔱✨Sri Aadhi Shiva Guru Vasi yoga💫

No comments:
Post a Comment